சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். சிலம்பரசன் ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். நந்திதா, பாரதி ராஜா, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமன், ஈஸ்வரன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகளை முடித்து விட்டதாக பதிவு செய்துள்ளார். டால்பியில் Knack ஸ்டுடியோவில் துவங்கப்பட்ட இந்த பணி நிறைவடைந்தது என கூறியுள்ளார். இதனை பார்த்த சிலம்பரசன் ரசிகர்கள், படத்தில் சிம்பு பாடல் இருக்காரா ? என்ற கேள்வியை முன்வைத்தனர். 

தமன் இசையில் வெளியான ஒஸ்தி படத்தில் பொண்டாட்டி பாடலும், வாலு படத்தில் லவ் என்றவன், எங்கதான் பொறந்த போன்ற பாடல்களை சிம்பு பாடியிருப்பார். அதனால் ஈஸ்வரன் படத்திலும் இந்த மேஜிக் நடைபெறுமா ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடைசியாக படத்தின் முதல் சிங்கிள் தமிழன் பாட்டு வெளியானது. அனந்து, தீபக் மற்றும் தமன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். பாடலின் லிரிக் வீடியோவை பார்க்கையில் பிரமாதாக உள்ளதென பாராட்டி வருகின்றனர். பழைய சிம்பு வந்தாச்சு என்றெல்லாம் கமெண்ட் செய்தனர் ரசிகர்கள். 

டீஸருக்கு அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் சுசீந்திரன். சிம்பு தன் உடல் எடையை 30 கிலோ குறைத்த பிறகு நடித்துள்ள முதல் படம் ஈஸ்வரன் என்பதால் அதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஈஸ்வரன் படத்திற்கான டப்பிங் பணிகளையும் நிறைவு செய்தார் சிலம்பரசன். 

ஈஸ்வரன் படத்தின் தமிழகத் திரையரங்க உரிமையை 7ஜி சிவா வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ம் தேதி மாஸ்டர் வெளியாவதால், ஜனவரி 14-ம் தேதி ஈஸ்வரன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். பொங்கல் விடுமுறை என்பதால், இந்த வெளியீட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் ஈஸ்வரன் படக்குழு தீர்மானமாக உள்ளது. சுல்தான் உள்ளிட்ட இதர படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.