12 ஆம் வகுப்பு மாணவியை ஏற்கனவே திருமணம் ஆனவர் காதலித்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அடுத்து உள்ள தென்பழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான கட்டட தொழிலாளி தங்கபாண்டி என்பவருக்கு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, தங்கபாண்டியின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவே இல்லை. இது தொடர்பாக, கணவன் - மனைவி இருவரும் பலவிதமான சிகிச்சை முறைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், சற்று வித்தியாசமாக யோசித்த 27 வயதான கட்டட தொழிலாளி தங்கபாண்டி, குழந்தை இல்லாத குறையை போக்க தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து பக்கத்து ஊரைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

அந்த இளம் சிறுமியை, காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைக் கூறி, அந்த சிறுமியிடம் அவர் பழகி வந்துள்ளார்.

இதனால், அந்த சிறுமியும் அவரை நம்பி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படியாக, இவர்கள் காதலிக்க ஆரம்பித்த நிலையில், நெருக்கமாகப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, 27 வயதான கட்டட தொழிலாளி தங்கபாண்டி, அந்த 12 ஆம் வகுப்பு மாணவியை தன் வீட்டில் ஒரு பொய்யான காரணத்தைச் சொல்ல வைத்து, அடிக்கடி அந்த மாணவியை தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை 

ஆசையான வார்த்தைகளை அள்ளி வீசி, அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக, அந்த மாணவி கரு உற்றுள்ளார்.

தொடக்கத்தில் அந்த மாணவி, இந்த விசயத்தைத் தனது வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆனால், மாதங்கள் கடக்கக் கடக்க அந்த மாணவியின் வயிற்றில் வளர்ந்த கரு எட்டு மாத காலமாக வளர்ந்து உள்ளது. இதனால், அந்த கர்ப்பிணியான மாணவியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. மகளின் உடலில் பல மாற்றத்தைப் பார்த்த அந்த மாணவியின் தாயார், அவரிடம் அன்பாக பேசி விசாரித்து உள்ளனர். 

அப்போது, அந்த மாணவி தனது காதல் கதைகள் பற்றியும், காதலன் தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதையும் கூறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அங்குள்ள சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், தங்கப்பாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப் படி, தங்கபாண்டியை போலீசார் சிறையில் அடைத்தனர். 

மேலும், 12 ஆம் வகுப்பு படிக்கும் இந்த பள்ளிப் பருவத்தில், 8 மாத சிசுவை அந்த மாணவி தன் வயிற்றில் சுமந்து வருவதால், அந்த மாணவி தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.