புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் பொருட்களையே பதுக்குபவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்று சொல்லிவிட்டால், எவ்வளவு பதுக்குவார்கள் என சீமான் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ‘’  எடப்பாடியோ,  மோடியோ இந்த புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன  நன்மைகள்  ஏறப்டும் என விளக்க வேண்டியது தானே? எதிர்க்கின்ற வகையிலே அனைத்துச் சட்டங்களையும் கொண்டு வந்தால் எதிர்க்காமல் என்ன செய்வது? புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.


 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்பு விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்டாலின் எப்படி எந்த வகையில் விவசாயி?  மம்தா பானர்ஜி போல உறுதியாக இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். கொரனோவைக் காரணம் காட்டி குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்து விட்டார்கள். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் அதுவரை நாட்டில்  போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்  ” என்றார்.