பிக் பாஸ் 4 போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வழங்கப்பட்ட கோழிப்பண்ணை டாஸ்கில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன என கமல் தெரிவித்தார். காலை வெளியான ப்ரோமோவில் எவிக்ஷன் பற்றி பேசத் துவங்கினார். ஆஜீத், அர்ச்சனா, சோம் ஆகிய இந்த மூவரில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை காண ஆவலாக உள்ளனர் பிக்பாஸ் விரும்பிகள். 

பிக்பாஸ் வீட்டில் அன்பு கேங்கின் சத்தம் சற்று குறைந்தாலும், விதிமுறைகளை பின்பற்றுவதில் தொடங்கி, யார் முட்டையை உடைத்தது என்பது வரை பல்வேறு விதமான சண்டைகள் நடந்தது. அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா உள்ளிட்ட நான்கு பேர் டீம் சேர்ந்துகொண்டு ஒரு குரூப்பாக டாஸ்க் விளையாடி அதில் வரும் பணத்தை அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

விதிமுறைகளில் ஏன் இத்தனை குழப்பம் என கமல்ஹாசன் அனைவரிடமும் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய ஆரி நரிகளுக்குள் ஒரு நான்கு பேர் டீம் உருவாக்கி கொண்டார்கள் என கூற தொடங்கினார். அப்போது இடையில் பேசிய ரம்யா, அதில் அவரும் இருந்தார். For your kind information என கமலிடம் கூறினார். அதற்கு கமல் Informant ரம்யா, பாதிக்கப்பட்டவர்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும்.

மேலும் ரூல்ஸ் பற்றி குழப்பத்திலேயே இருந்ததாக அர்ச்சனாவும் கூறினார். அதற்கு கமல் அர்ச்சனா.. சட்டம் வெளியேவாக இருக்கட்டும்.. உள்ளேவாக இருக்கட்டும்.. தனி நபர் சவுகர்யத்திற்காக வளைக்க முடியாது. வளைச்சா நிமித்திடுவேன். நான் கேட்பேன் என கோபத்துடன்கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் 77-ம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அர்ச்சனா தன் முட்டையை பாதுகாத்த விதம் நன்றாக இருந்ததென கூறினார். நிஜமாகவே கோழியாக மாறியிருந்தார் எனவும் பாராட்டினார். திடீரென வெடித்த அந்த கோபம் ஏன் ? என கமல் கேட்க... சோம் அப்படி செய்ததால் தான் கோபம் வந்தது என அர்ச்சனா கூறினார். கோழிப்பண்ணை டாஸ்க்கில் முட்டையை எரித்து கிழித்த போது வராத கோபம்... இப்போ ஏன் என்று கமல் தனது கேள்வியால் மடக்கியுள்ளார். இன்று இரவு தெரிந்து விடும், வெளியேறிய போட்டியாளர் யார் என்று... அதனை பார்த்து ரசிக்க ஆவலாக உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.