கள்ளக் காதலனோடு மனைவி நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன், கடும் ஆத்திரமடைந்து மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு போலீசாரில் சரண் அடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சின்ன நீலாங்கரை மேட்டு காலனியைச் சேர்ந்த 40 வயதான ஹரி என்ற நீலஹரி, தனது மனைவியான 35 வயதான கோமதி உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு, கடந்த 2005 ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்ற நிலையில், 15 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன் ஹரி, அந்த பகுதியில் எலக்ட்ரிசியனாக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி கோமதி, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தற்காலிக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராகவும் பணிபுரிந்து வந்தார். 

அதாவது, சென்னையில் கொரோனா வரவி வந்த இந்த காலகட்டத்தில், கோமதிக்கு, சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த உமேஷ் என்பவர் தான், தற்காலிக வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். 

இந்த நிலையில், தனக்கு வேலை வாங்கித் தந்த உமேஷுடன், கோமதி அதிக நேரம் செல்போனில் தொடர்ச்சியாகப் பேசி வந்து உள்ளார். இதனை கணவர் ஹரி கடுமையாகக் கண்டித்து உள்ளார். 

ஆனால், இதனைப் பற்றி கண்டுகொள்ளாத மனைவி கோமதி, அந்த நபரிடம் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. 

இப்படியாக இவர்களது பழக்கம் தொடர்ந்து வந்த நிலையில், அது கள்ளக் காதலாக மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கள்ளக் காதலர்கள் இருவரும், மிகவும் நெருக்கமாகக் கள்ளக் காதலில் இருந்ததை கணவன் ஹரி, பார்த்து உள்ளார் என்று கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் ஹரி, தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கடந்த 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கணவன் - மனைவிக்கு இடையே எப்போதும் போல் வழக்கமாக சண்டை வந்துள்ளது. அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில், கடும் ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார்.

இதில், கோமதி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கணவன் ஹரி, நீலாங்கரை காவல் நிலையத்திற்கு ரத்தக் கறைகளோடு சென்று உள்ளார். அங்கு, போலீசார் முன்பு “எனது மனைவியை நான் கழுத்தறுத்துக் கொலை செய்து விட்டதாகக் கூறி” கதறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அவருடன் வீட்டிற்கு சென்று பாரத்து உள்ளனர். அங்கு, கோமதி சடலமாக கிடந்து உள்ளார். இதனையடுத்து, சடலத்தை மீட்ட போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கணவன் ஹரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மனைவியின் கள்ளக் காதல் விசயம் தெரிய வந்தது. இதையடுத்து, ஹரியைக் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, மனைவியை கொலை செய்து விட்டு கணவன் சிறைக்குச் சென்ற நிலையில், அவர்களது மகன் - மகள் இருவரும் பெற்றோர் யாரும் இல்லாமல் உறவினர் வீட்டில் அடைக்கலம் அடையும் சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.