சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்  கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ இது மிகப்பெரிய முக்கியமான கூட்டம். இங்கு கலந்து கொண்டுள்ள 1,650 நிர்வாகிகளுடன் தான் 234 தொகுதியும் அடங்கி உள்ளது. 243 தொகுதியும் உங்களிடம் தான் அடங்கிய உள்ளது. அண்ணா, கருணாநிதி நம் உள்ளத்தில் இருந்து நம்மை இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.

மந்திரத்தால் மாங்காய் பழுக்காது என்பது போல வெற்றியை பெறுவதற்கு பணியை செய்ய வேண்டும். தமிழகத்தை வாழ வைக்க வேண்டிய தேர்தல் இது. ஐந்து முறை வெற்றி பெறுவதற்கு சமம் தான் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவது. நமக்கு எதிராக, ஊடகங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. 


ஆட்சி அமைப்பதற்கு 117 இடங்கள் போதும். அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்கு அளிப்பது அவமானம் என்று மக்களுடன் சொல்ல வேண்டும். சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க செய்கிறார்கள். அர்ஜுனன் வைத்த குறி தப்பாதது போல் திமுக வைத்த குறி தப்பக் கூடாது. 
 பிரச்சார வியூகத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களை சந்திக்கவில்லை. 200 தொகுதிக்கு ஒரு இன்ஞ் கூட குறைய கூடாது. நம்மால் முடியும். நம்மால் மட்டும் தான் முடியும். யாருடன் கூட்டணி, யாருக்கு எந்த தொகுதி என்று கவலைகொள்ள வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” என்று தொண்டர்களிடம் கூறினார்.