அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில்  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாகுறை இருக்கும் போது மினி கிளினிக் திட்டம் விளம்பரத்துக்காக கொண்டு வரப்பட்டு இருக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டி இருக்கிறார்.


மேலும் அவர், ‘’ புயலால் , கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தோம். அப்போது எல்லாம் நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் தற்போது பொங்கல் பரிசு என்று 2500 ரூபாய் தருகிறார். இது பரிசு இல்லை. தேர்தலுக்கான லஞ்சம். மக்கள் வரி பணத்தை எடுத்து பொங்கல் பரிசு என்ற பெயரில் தேர்தல் நேரத்தில் லஞ்சமாக வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி. அவரின் கணக்கு பழிக்காது. 


ஏற்கனவே மருத்துவர்கள், செவிலியர்கள்  பற்றாகுறை அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்களில்  இருக்கும் போது அவற்றை மேன்படுத்தாமல், தேர்தல் நேரத்து விளம்பரத்துக்காக மினி கிளினிக் திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.  

வேளாண் சட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவிப்பது வேதனையாக இருக்கிறது. இந்த வேளாண் சட்டம் மூலம் எதிர்காலத்தில் நெல் கொள் முதல் நிலையங்களும், ரேசன் கடைகளும் இருக்காது. பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் விளைபொருட்களுக்கு செயற்கை விலை நிர்ணயம் செய்ய நிலை தான் உருவாகும்” என்றார்