காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் 11 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. 


ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது. இந்த நிதியை முழுமையாக கிரிக்கெட் வளர்ச்சிக்காக பயன்படுத்தாமல், ரூ..43.69 கோடியை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா மற்றும் அவரது நிர்வாகிகள் ஊழல் செய்துவிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. 


ஜம்முவில் சுன்ஜுவானில் பாதிந்தியில் பரூக் அப்துல்லா வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார்.  மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக பரூக் அப்துல்லா இருந்தபோது, ஏராளமான பணத்தைத் ஊழல் செய்து இருக்கிறார், சட்டவிரோதமாகப் பலர் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு நிதியைக் கையாளும் அதிகாரம் வழங்கியது எல்லாம்  விசாரணையில் தெரியவந்தது இருக்கிறது. 


மோசடி செய்த தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.