வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “ அசுரன்” திரைப்படம்  இந்திய சர்வேதேச திரப்பட  விழாவிற்கு தேர்வாகியுள்ளது.இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

வெற்றிமாறனுடன் இணைந்து தனுஷ் நடித்த 4 வது திரப்படம் அசுரன்.இந்த படத்தில் பசுபதி, மஞ்சுவாரியர்,கென்,டீஜே உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபத்திரத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷின் இசை மனதை உலுக்கும் வண்ணத்தில் இருந்தது. மொத்தத்தில் இந்த படம் மக்களை முழுமையாக சென்று அடைந்தது என்றே சொல்லலாம்.ஏற்கனவே இந்த படம் இந்த ஆண்டு பல விருதுகளைப் பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் மேலும் பெருமைக் கொள்ளும் அளவிற்கு “ அசுரன்” திரப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அசுரன் திரப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ரிருந்தது.

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த 51 வது சர்வதேச கோவா திரைப்படவிழாவானது தற்போது இந்த கொரோனோ பரவல் காரணமாக அடுத்த ஆண்டிற்க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் 24 தேதி வரை இந்த விழா நடைபெறூம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் பட்டியலைத் தேர்வுக் குழு வெளியிட்டது. அந்த வரிசையில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான  அசுரன் திரைப்படம் வெகுஜன திரைப்பட பிரிவிலும் ,கணேஷ் விநாயகம் இயக்கத்தில் உருவாகி இன்னும் வெளிவராமல் இருக்கும் தேன் திரைப்படமும் தேர்வாகியுள்ளது. தேன் திரைப்படம் வெறும் பத்திரிக்கையாளர்கள் காட்சி மட்டுமே  திரையிடப்பட்டுள்ளது. தேன் படத்தின் வெளியீட்டுத் தேதியை விரவில் அறிவிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.