கமல், ரஜினியின் அரசியல் செயல்பாடுகளைப் பற்றி பேசிய காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் ,’’ எம்.ஜி.ஆர் பற்றி பேசுவது வெறும் மேடைக்கு மட்டும் தான் உதவும். அதிமுகவின் ஐந்து ஆண்டுகள் செயல்பாடுகள் தான் தேர்தலை எதிர்க்கொள்ள உதவும். எம்.ஜி.ஆர் பற்றி தொடர்ந்து பேச்சிக்கொண்டு இருப்பது நடைமுறைக்கு ஒத்துவராது. எடப்பாடியின் செயல்பாடுகளை வைத்து தான் மக்கள் வாக்களிப்பார்கள். 


தி.மு.க காங்கிரஸ் கூட்டணி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக வைத்திருக்கிறது.  இந்தமுறை தேர்தலில் தி.மு.க , காங்கிரஸ் கூட்டணி தான் அமோக வெற்றி பெறும். கமலஹாசன்  கூட்டணி பேச்சு வார்த்தையில் இருப்பதாக தெரிகிறது, அவர் மதசார்பற்ற கூட்டணியில் தான் இணைய வேண்டும். 


வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் அமோக வெற்றி பெற போகிறது. இந்த தேர்தலுக்கு பின்பு ரஜினி அரசியலில் இருப்பாரா என்பதே முதலில் கேள்விக்குறி தான். ரஜினிக்கு பின்னாடி பாஜக இருக்கிறது, வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பிரிக்கின்ற சக்தியாக இருக்கப்போகிறார் போன்று அவரை சுற்றி இருக்கும் கருத்துகளை,  அவர் தான் தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால் கமல், ரஜினிக்கு மக்கள் வாக்கு அளிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பது ஒன்று தான்.  ” என்று கார்த்திக் சிம்பரம் தெரிவித்து இருக்கிறார்.