பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 76 நாட்களை கடந்து செல்கிறது. நேற்றய எபிசோடில் ஓபன் நாமினேஷன் பற்றி கமல் பேசினார். அனைவரும் ஒப்பனாக கருத்துகளை கூறியதாக தெரிவித்தனர். அர்ச்சனா நம்பர் கேம் என கூறியது பற்றி கமல் கேட்டார். நீங்கள் மட்டும் இல்லை, ரசிகர்கள் நம்பர் கேம் செய்தால் என்ன ஆகும் என கமல் எச்சரித்தார்.

பாலாஜி ஷிவானி மற்றும் ஆஜித்தை முன்னிலைப்படுத்தி இந்த வாரம் விளையாடியது போல தோன்றியதாக கூறினார். அர்ச்சனா குரூப்பிஸம் செய்தது போய் இப்போது அனைவரது பார்வையும் பாலாஜி பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த வீட்டில் யார் கோழி, யார் நரி என ஒவ்வொருவராக சொல்லுங்கள் என கமல் கேட்டார். அப்போது அதிகம் பேர் அர்ச்சனாவை கோழி என கூறினர். அதே போல பாலாஜி மற்றும் ஆரியை நரி என தலா 4 பேர் கூறினர்.

அனிதா மீடியாவில் இருந்து வந்ததால் அனைத்து விஷயங்களையும் யோசித்து யோசித்து நரி போல செய்கிறார் என ஆரி சொன்னார். அது பற்றி அர்ச்சனா கோபத்துடன் பேசினார். நானும் மீடியாவில் இருந்து தான் வருகிறேன். அது எப்படி அவர் பொதுவாக சொல்லலாம் என சண்டை போட்டார்.

விதிமுறைகள் ஏன் குழப்பமாக இருக்கிறது என கமல் கூறினார். அது பற்றி ஒவ்வொருவரும் குழப்பமாக பதில் சொல்ல, கமலே அந்த ரூல் புக்கை எடுத்து படித்து காட்டி இதில் என்ன குழப்பம் என கேட்டார். தனிநபருக்காக சட்டத்தை வளைத்தால் நான் நிமித்திவிடுவேன். நான் கேட்பேன் என கோபத்துடன் கூறினார். இனிமேலாவது தனி நபர் லாபத்திற்காக இப்படி செய்யாதீர்கள் என கமல் கேட்டுக்கொண்டார்.

Rules-ஐ சரியாக யாரும் பின்பற்றவில்லை என ஆரி மற்றவர்களை குறை சொல்கிறார் ஆனால் அவரே சில இடங்களில் மீறி இருக்கிறார் என ரம்யா, பாலா என சேர்ந்து டார்கெட் செய்தனர். இது தொடர்பான வாக்குவாதம் கமல் முன்னிலையிலேயே ஆரி மற்றும் ரம்யா இடையே நடைபெற்றது. நாமினேஷனில் இருந்து ரியோ மற்றும் ஆரியை கமல் நேற்று காப்பாற்றி உள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், எவிக்ஷன் பட்டியலுடன் வருகிறார் கமல். அப்போது ஆஜீத், சோம், அர்ச்சனா ஆகியோர் பட்டியலில் உள்ளனர். முட்டையை உடைக்கும் படி கமல் கூற, ஆரி மற்றும் பாலாஜி முட்டையை உடைக்கின்றனர். நகர்ந்து நகர்ந்து இருக்கையின் ஓரத்திற்கு வந்த ஆஜீத்தை பார்த்து இது தான் edge of the seat-ஆ என்று கேட்கிறார் கமல். ஆஜீத் காப்பாற்றப்படுவார் என்று ஆரி ஒரு புறம் கருத்தை முன்வைக்கிறார். அர்ச்சனா தான் இந்த வார எவிக்ஷன் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார் என்று....