தெலுங்கானா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று இருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் துண்டிகலில் உள்ள இந்திய விமானப் படை அகாடமியின் தளத்தில் நடைபெற்ற கூட்டு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது , ‘’ இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனப் படைகளிடமிருந்து நமது படை பலம் குறைந்தது இல்லை என்று நிரூபித்திக்கொண்டே இருக்கிறோம். 


இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறோம். இருப்பினும் பதற்றத்தை ஏற்படுத்தினாலோ ,அத்துமீறல்கள் நடந்தாலோ இந்தியா பதிலடி கொடுத்தே தீரும். அச்சுறுத்தல்களையும் , அத்துமீறல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. கொரோனா காலத்திலே சீனாவின் நோக்கம் என்ன என்று உலக நாடுகளுக்கு புரிந்துவிட்டது. உலக நாடுகள் இந்தியாவுடன், இணக்கமாகவே இருக்கிறது. இந்தியா எப்போது அமைதியையே நிலைநாட்ட விரும்புகிறது. எல்லையில் அமைதியை நிலை நாட்ட சீனாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது”  என்றார் ராஜ்நாத் சிங் கூறினார்.