கோவை மாணவியின் தற்கொலை வழக்கில், பள்ளி தலைமை ஆசிரியர் தக்க நேரத்தில் நடவடிக்கை எடுக்காததே என் மகளை இன்று இழந்து நிற்பதற்கு காரணம் என பெற்றோர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர் ஒருவரின் 17 வயது மகள், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு  படித்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த உக்கடம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தற்கொலை செய்த அறையில், அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், இரண்டு பெயர்கள் மற்றும் ஒரு ஆசிரியரையும் குறிப்பிட்டு 'அவர்களைச் சும்மா விடக்கூடாது' என எழுதப்பட்டு இருந்தது. 

இதையடுத்து காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அப்போது, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி 11-ம் வகுப்பு வரை படித்தபோது, அந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது குறித்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எடுக்காததாலேயே தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் கூறினர்.

k1

அதனால் அவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை, தங்களது மகளின் உடலை பெற மாட்டோம் என பெற்றோர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் மாணவி படித்து வந்த பள்ளியின் சக மாணவர்களும் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. 

கோவை மாணவியின் தற்கொலை வழக்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

போராட்டம் வலுத்துவந்தநிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுது காரியங்களை செய்தனர். 

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் ‘கலாட்டா சேனலுக்கு’ அளித்த பேட்டியில், ‘தனது மகள் மிகவும் தைரியசாலி என்றும், அவள் புகார் அளித்தபோதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், தனது மகள் நன்றாக படித்து அவளின் கனவு நினைவாகியிருக்கும்’ என்று கூறினர்.

மேலும், ‘6 வருடமாக அந்த தனியார் பள்ளியில் நன்றாக படித்து வந்த தனது மகள், பன்னிரெண்டாம் வகுப்பில் சரியாக படிக்காமல், வேறு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றதாலேயே அந்த தனியார் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் படிக்க வைத்தோம்.

பதினொன்றாம் வகுப்பில் ஆன்லைன் வகுப்பில் படிக்கும்போது தான், இந்த பாலியல் தொந்தரவு நடந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையை அவளே தனியாக சென்று பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இயற்பியல் ஆசிரியரின் மனைவியிடம் எடுத்துக்கூறியும் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், தனது மகளுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்’ என்றும் மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். 

k2

‘இயற்பியல் ஆசிரியரால் தனது மகளை போன்று 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் இருவரும் வெளியே வரமுடியாத அளவிற்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

மேலும் ‘இயற்பியல் ஆசிரியரின் பாலியல் தொந்தரவால், சிறுவயதில் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர்  தொந்தரவு கொடுத்ததாகவும் மனகலக்கத்தால், தனக்கு என்னசெய்வதன்று தெரியாமல் கடிதம் எழுதி வைத்திருப்பதாக’ மாணவியின் தாய் கூறியுள்ளார். கோவை மாணவியின் தற்கொலை வழக்கில், பெற்றோர் கொடுத்த பேட்டியின் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.