தமிழ் சினிமாவின் ஃபேவரட் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் குமார், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக செல்ஃபி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக பின்னர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்த திரைப்படம் ஜெயில்.

KRIKES சினி க்ரியேஷன்ஸ் தயாரித்துள்ள ஜெயில் திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்க, ராதிகா சரத்குமார் பசங்க பாண்டி , யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல்ராஜா வெளியிடும் ஜெயில் திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜீவி பிரகாஷ் குமாரின் பேச்சுலர் திரைப்படம் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.