மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில்  பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று வேளாண் சட்டங்களை வாபஸ் என்று மோடி அறிவித்தநிலையில் விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுரித்துள்ளது .

priyankaதலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,  இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.  எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .

இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  எனினும், தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்தியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியிருப்பதாவது;-  

விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாகவே பாஜக அரசு சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் அதிகாரமும் அவர்களின் முதலாளித்துவ நண்பர்களும் இறுதியில் தோல்வி அடைந்துள்ளனர். இன்று மோடியின் ஆணவம் தோற்ற தினமாகும்” என்று தெரிவித்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து  மோடி அரசுக்கு ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ள காங்கிரஸ், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அளிப்பதற்கு என்ன திட்டத்தை பாஜக வைத்துள்ளது.  விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்க என்ன திட்டம்  பாஜக அரசிடம் உள்ளது? போன்ற கேள்விகளை முன்வைத்துள்ளது. தேர்தல் வந்து விட்ட காரணத்தால்தான் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார் பிரதமர் மோடி என பிரியங்கா கருத்து ஒன்றை தெரிவித்தார் . பிரதமர் நரேந்திர மோடியை யார் நம்புவார்கள் . நாட்டின் முன்பு அத்தனையும் தெளிவாக இருக்கிறது. விவசாயிகளை மட்டுமல்லாமல் யாரையும் மோடியால் ஏமாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் .

மேலும்  இத்தனை தாமதமாக வாபஸ் பெறுவது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மரணத்துக்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் கேட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பிரியங்கா காந்தியிடம்  மோடி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்குப் பதிலளித்து பிரியங்கா பேசியதாவது:  உபியில் தேர்தல் வருகிறது. பஞ்சாபில் தேர்தல் வருகிறது. இதனால்தான் இந்த முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி. பரிதாபமாக இறந்து போனாரே விவசாயி தல்ஜித் சிங், அவரது குடும்பம் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்.  விவசாயிகள் மீது டிராக்டரை விட்டு ஏற்றிப் படுகொலை செய்தாரே ஒரு அமைச்சரின் மகன், அப்போது பரிதவித்துத் துடித்த விவசாயிகள் குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறேன். பிரதமர் நமக்கு ஒருபோதும் உதவ முன்வர மாட்டார் என்று ரத்தக்கண்ணீர் வடித்த விவசாயிகளை நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் இன்று பிரதமர் மன்னிப்பு கேட்கிறார் என தெரிவித்தார் .

தேர்தல் வந்து விட்டது. பாஜக பலவீனமாக இருப்பதாக பல சர்வேக்கள் சொல்கின்றன. அதனால்தான் இப்படி மன்னிப்பு, வாபஸ் என்று இறங்கியுள்ளார் பிரதமர். யார் இவரை நம்பப் போவது.. எல்லாமே வெட்ட வெளிச்சமாக உள்ளன. அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், லக்கிம்பூரில் முறையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் விவசாயியை விட புத்திசாலி யாரும் கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், உணர்ந்து கொண்டும்தான் உள்ளனர். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு நன்றாகவே புரியும் என்றார் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் .