தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் செம. இயக்குனர் வள்ளிகாந்தன் இயக்கிய செம படத்தின் வசனங்களை இயக்குனர் பாண்டிராஜ் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்க பைரவி கிரியேஷன்ஸ் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் தயாரித்த செம படத்திற்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்தார். ஜீவி-உடன் இணைந்து அர்த்தனா பினு கதாநாயகியாக நடிக்க, யோகிபாபு, மன்சூரலிகான், சுஜிதா சிவகுமார், கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்நிலையில் செம படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து ஜெமினி கணேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜன நாதனுக்கு  திருமணம். நடைபெற்றுள்ளது. நடிகர் ஜனநாதன், சுவாதித்ரா மோகன் தாஸ்-ஐ திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ஜனநாதன் மற்றும் சுவாதித்ரா மோகன்தாஸ் திருமணம் உறவினர்கள் சூழ சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றுள்ளது. புதுமணத் தம்பதியான நடிகர் ஜனநாதன் சுவாதித்ரா மோகன்தாஸ் ஜோடிக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jana (@iam_jana93)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jana (@iam_jana93)