மரக்கார் பட உரிமையை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பு நிறுவனம்!
By Anand S | Galatta | November 19, 2021 13:20 PM IST
மலையாளத் திரையுலகின் பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில், முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மரக்கார்- அரபிக்கடலின்டே சிம்ஹம்.
மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் குஞ்ஞாலி மரக்கார் IV கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், முகேஷ், நெடுமுடி வேணு, பிரணவ் மோகன்லால், அசோக் செல்வன், சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், ஹரிஷ் பெரடி நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய,ராகுல் ராஜ், அங்கிட் சூரி, லைல் எவன்ஸ் ரோடர் ஆகியோர் இணைந்து பின்னணி இசை சேர்க்க,பாடல்களுக்கு ரோனி ராஃபெல் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி தயாரிப்பாளரான திரு.கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “வரலாற்று சிறப்பு மிக்க #MaraikayarArabikadalinSingam திரைப்படத்தை #VCreations சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமைக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க #MaraikayarArabikadalinSingam திரைப்படத்தை #VCreations சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமைக்கொள்கிறேன். @Mohanlal @priyadarshandir @akarjunofficial @kalyanipriyan @KeerthyOfficial pic.twitter.com/jdBMG5G4kv
— Kalaippuli S Thanu (@theVcreations) November 18, 2021