தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்திலும், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.விருமன் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக, புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சமூக பொறுப்புள்ள தமிழராக பல சமூக நல செயல்களில் ஈடுபட்டு வரும் நடிகர் கார்த்தி, தனது உழவன் அறக்கட்டளை மூலமாக விவசாயிகளின் நலனுக்கு உதவி வருகிறார். அந்த வகையில் கடந்த ஒரு வருடமாக இந்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் மிகப் பெரிய போராட்டத்திற்கு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை கொடுத்து வந்தார் நடிகர் கார்த்தி.

இந்நிலையில் இந்திய பிரதமர் அவர்கள் புதிய வேளாண் சட்டத்திலிருந்து 3 சட்டங்களை திரும்ப பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,

மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய  வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும். #FarmersProstest “

என தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தியின் அந்த பதிவு இதோ…