சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது  படக்குழு தெரிவித்துள்ளது.  

suryaநடிகர் சூர்யா, தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் பட சர்ச்சையால் நடிகர் சூர்யாவை வன்னியர் இன மக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். வன்னியர் மக்களை இழிவு படுத்தும் விதமாக ஜெய் பீம் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் வன்னியர்களின் மனம் புண்பட்டுவிட்டது என்றும் வன்னியர் சங்கத்திற்கு  ரூ .5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும்  வன்னியர் சங்கம் தெரிவித்தது . இந்நிலையில் பாமக ஒருங்கிணைப்பாளர் அன்புமணி ராமதாஸ்க்கு  நடிகர் சூர்யா பதில் அறிக்கையாக எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத  யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதியாகத்தான் நடந்து கொல்கிறாரகள் இதில் சாதி இன் மதம் மொழி பேதம் இல்லை சகமனிதனின் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தருகிறேன் சமத்துவம் சகோதரத்துவம் பெறுக அவரவர் வழியில் தொடர்ந்து செயல் படுவோம் என்று புரிதலுக்கு நன்றி என சூர்யா அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு கொடுத்துவருகினறனர். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் அதனை தொடர்ந்து நடிகை ரோகினி, இயக்குனர் பாரதிராஜா போன்ற திரை பிரபலங்கள் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கினறனர். எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் நாடு முழுவதும் நடிகர் சூர்யாவிற்கு உள்ளது. வன்னியர்கள்  விமர்சனங்களை தொடர்ந்து மக்கள் சமூக வலைத்தளங்களில் #istandwithsurya  என்ற hashtag-யிட்டு மக்கள் தங்கள் ஆதரவுகளை சூர்யாவிற்கு  தெரிவித்து வருகின்றனர்.


சேலம் மாவட்டம் பாமக மாவட்ட செயலாளர் இரா.அருள், வெளியிட்ட அறிக்கையில்  கூறியதாவது ஜெய் பீம் திரைபடத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்தது தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த வன்னியர்களின் மனதையும் புண்படுத்திவிட்டது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மிகவும் கொந்தளிப்பாக உள்ளனர் எனவே இனிவரும் காலங்களில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் திரைப்படங்களை  திரையிட வேண்டாம் என்று அறிக்கையில் தெரிவித்தார். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'  படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4ம் தேதி  திரையரங்கில் வெளியாக உள்ளது  படக்குழு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியானது.  அதனை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  கிறிஸ்துமஸ் விடுமுறை அல்லது பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது.  பொங்கல் தினத்தில் ஏற்கனவே அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.  இதனால் சூர்யா படமும், அஜித் படமும் மோதிக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  தற்போது இந்த இரண்டு தேதிகளும் இல்லாமல் எதற்கும் துணிந்தவன் படம் 2022-ல்  பிப்ரவரி மாதம் 4-ம் தேதியில்  திரையரங்கில் வெளியாக உள்ளது.

  
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் இப்படத்தை வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தற்போது இப்படத்தை வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.