கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

cuddaloreதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இது கடந்த ஆண்டுகளில் பெய்த பருவ மழையை விட அதிகமாக உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் விளைநிலங்கள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதன் பிறகு மழை ஓய்ந்ததால் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து வந்தது. 

இந்நிலையில் தெற்கு, கிழக்கு வங்க கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து புயல் சின்னமாக மாறியது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக இன்று காலை வரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை தெற்கு ஆந்திரா, நெல்லூர், ஓங்கோல் வரை கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆறு மற்றும் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

மேலும் குறிப்பாக தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அப்படி கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 60, 1284 கன அடியும் வெள்ளாற்றில் 10, 1352 கன அடிக்கும் மேல் பரவ நாட்டில் 927 கன அடியும் கீழ் பரவ நாட்களில் 941 கனஅடியும் தண்ணீர் பாய்கிறது. இதேபோல் கடலூர் நகர் பகுதி வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி யும் கெடிலம் ஆற்றில் 5, 321 கன அடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் அதனை ஒட்டியுள்ள குண்டு சாலை ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதேபோன்று குண்டு உப்பலவாடி, குமரப்பன் நகர், புருஷோத்தமன் நகர், ஓம் சக்தி நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து.
இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளநீர் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் ஆல்பேட்டை,திடிர்குகபம்,ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பெரிய கங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி, குமரப்பன் நகர், தியாக நகர்,  வேலன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று தங்கியுள்ளனர்.