விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் நீரின் ஆதிக்கம் என்பதால் பாத்ரூம் மற்றும் நீர் , நீரின் நாணயத்தை கொண்ட வருணின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த வார நாமினேஷன் பிராசஸில்,அபிநய், அக்ஷரா, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, தாமரை, பாவனி மற்றும் நிரூப் ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் தொடங்கப்பட்டது. இந்த லக்சரி பட்ஜெட்டில் ஒரு அணியில் இருக்கும் போட்டியாளர்கள் மற்ற அணி போட்டியாளர்களின் கண்ணாடியாக செயல்பட்டனர். 

கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்த இந்த டாஸ்க்கில் அனல் பறக்கும் விவாதங்களும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.அந்த வகையில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கான இந்த வார  லக்சரி பட்ஜெட்டை  நம்பர்களோடு வைக்கப்பட்டிருக்கும் கிஃப்ட் பாக்ஸ்களில் கொடுக்கப்பட்டன. போட்டியாளர்கள் பெரிய DICE-ஐ உருட்ட அதில் விழும் நம்பரில் உள்ள பொருட்கள் வழங்கபடுகிறது.

இந்நிலையில் 9-ம் நம்பர் விழ அண்ணாச்சி அந்த கிஃப்ட் பாக்ஸ்-ஐ திறக்க அதிலிருந்து ஒரு போட்டியாளர் WILD CARD ENTRY-யாக வருகிறார். இவர் புதிய போட்டியாளரா? அல்லது முன்பு எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜாவா? என்ற எதிர்பார்ப்பு தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. 

பிரியங்கா மற்றும் தாமரையின் முகபாவனைகளை பார்க்கும்போது அபிஷேக் ராஜாவாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் இந்த புதிய WILD CARD ENTRY போட்டியாளர் என்பது இன்றைய (நவம்பர் 19) நிகழ்ச்சியில் தெரிந்துவிடும். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் WILD CARD ENTRY ப்ரோமோ இதோ...