உலக அளவில் IMDb-ல் ஹாலிவுட் திரைப்படங்களை பின்னுக்குத்தள்ளி 9.6 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம். இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய்பீம் படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்து நடித்துள்ளார்.

மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் அநீதிகள் நிறைந்த வாழ்க்கையையும் உண்மை சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய்பீம் திரைப்படம் பல கோடி ரசிகர்களின் மனதை வென்றதோடு பாராட்டுகளையும் பெற்றது.

ஜெய்பீம் திரைப்படத்தின் எதிரொலியாக பழங்குடியின மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து பட்டா வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஜெய்பீம் படத்தை எதிர்த்து வன்னியர் சங்கத்தினர் தங்களது சமூகத்தினை தாக்கி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக  நடிகர் சூர்யா மீது வழக்கு தொடர்ந்து 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் சூர்யாவிற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு வலுத்து வருகிறது. முன்னணி திரைப்பட இயக்குனர்களும் நடிகர்களும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வர, பல கோடி தமிழ் மக்களும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து #WeStandWithSuriya என Trend செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்திலிருந்து மனதை வருடும் தல கோதும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜுமுருகன் வரிகளில் ஷான் ரோல்டன் இசையில் பிரதீப்குமார் பாடியுள்ள அழகான இந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.