16 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களில் கிட்டதட்ட 400 பேர் தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர், தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்த சிறுமியின் தாயார் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தந்தையின் பராமரிப்பில் அந்த சிறுமி வளர்ந்து வந்தார்.

அத்துடன், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அந்த சிறுமியின் தந்தை, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மும்பைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். 

திருமணத்திற்கு பிறகு, அந்த சிறுமி அவரது கணவர் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு கணவன் மற்றும் மாமியாரால் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகி, அவர்களால் கண்மூடித்தனமாக மிகவும் மோசமான அளவில் தாக்கப்பட்டும், நடத்தப்பட்டும் வந்திருக்கிறார்.

இதனால், இனியும் கணவனுடன் வாழ முடியாது என்று அங்கிருந்து தப்பித்து தனது தந்தையை தேடி அந்த சிறுமி வந்திருக்கிறார். 

ஆனாலும், “உன்னை திருமணம் செய்து வைத்ததுடன், எனது கடமை முடிந்துவிட்டது” என்று கூறி, அந்த தந்தை அந்த சிறுமியை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இதனால், தந்தை வீட்டிற்கும் செல்ல முடியாமல், கணவன் வீட்டிற்கும் செல்ல முடியாமல் தவித்து வந்த அந்த 16 வயதான சிறுமி, பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்தார்.

அப்போது, அங்கு அங்கு வந்து செல்பவர்களால் அந்த 16 வயது சிறுமி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இப்படியாக, கடந்த 6 மாதங்களில் அந்த சிறுமியை கிட்டதட்ட 400 க்கும் மேற்பட்டவர்கள், பாலியல் பலாத்காரம் செய்த, அந்த சிறுமியை கசிக்கி பிழிந்து உள்ளனர்.

ஒரு கட்டத்தில் பாலியல் பலாத்கார வலிகளை தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த சிறுமி அங்குள்ள அம்பஜோகை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

ஆனால், இது குறித்து வழக்குப் பதிவு செய்யாத அந்த காவல் நிலைய போலீசார், அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த சிறுமி அங்குள்ள குழந்தைகள் நலக் குழுவிவை தேடிச் சென்று புகார் அளித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல அமைப்பு, அங்குள்ள காவல் நிலைய உயர் அதிகாரிகளிடம் சென்று புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இது தொடர்பாக 3 பேரை போலீசார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

முக்கியமாக, புகார் அளிக்க முயன்ற போது ஒரு போலீஸ்காரரால் அந்த சிறுமி பல முறை பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டதால், தற்போது அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார். இதனையடுத்து, அந்த சிறுமி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.