கல்யாணம் முடிந்து முதலிரவுக்கு செல்லாமல், காவல் நிலையத்தில் கணவனை ஒப்படைத்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்ற இளைஞர், அந்த பகுதியைச் சேர்ந்த பல இளம் பெண்களை காதலித்து, அவர்களை திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து, பல ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களுடன் உல்லாசமாக ஜாலியாக இருந்து விட்டு, அதன் பிறகு, அவர்களை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வாழ்ந்திருக்கிறார். 

அத்துடன், தான் காதலிக்கும் பெண்களுடன் ஜாலியாக இருப்பதை அந்த இளைஞர் தனது செல்போனில் வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது அதனை பார்த்து ரசித்துக்கொண்டு வந்திருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில் தான், அங்குள்ள நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது பெற்றோரை இழந்த நிலையில் அங்குள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த இளம் பெண்ணின் பெற்றோர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த இளம் பெண் அங்கு தனது உறவினர்கள் உதவியுடன் தனியாக வசித்து வந்தார்.

இதனை தெரிந்துகொண்ட காதல் ரோமியோ தியாகராஜன், வழக்கம் போல் அந்த இளம் பெண்ணுக்கும் காதல் வலை வீசியிருக்கிறார். 

அப்போது, அந்த இளைஞரின் காதல் வலையில் பெற்றோரை இழந்த அந்த இளம் பெண் விழுந்திருக்கிறார். 

இதனையடுத்து, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கி உள்ளனர். அப்போது, காதலர்கள் இருவரம் அந்த பகுதியில் ஊர் சுற்றி வந்திருக்கிறார்கள்.

அப்படியான சூழலில், காதலிக்கும் போது அந்த பெண், காதலன் தியாகராஜனின் செல்போனை எடுத்து எதார்த்தமாக பார்த்திருக்கிறார்.

அப்போது, காதலன் தியாகராஜனின் செல்போனில் அவர் பல பெண்களுடன் ஜாலியாகவும், உல்லாசமாகவும் இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

இதனையடுத்து, இது குறித்து தனது காதலன் தியாகராஜனிடம் அந்த இளம் பெண் விளக்கம் கேட்டிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த காதலன், அந்த பெண்ணிடமிருந்து நைசாக நழுவிச் செல்ல தொடங்கியிருக்கிறார்.

ஆனால், அந்த இளம் பெண் தனது உறவினர்கலிடம் சொல்லி, காதலன் தியாகராஜனை அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். 

குறிப்பாக, திருமணம் முடிந்த கையுடன் முதல் இரவிற்கு செல்லாமல் தனது கணவனை, மாலையும் கழுத்துமாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அந்த புதுமணப் பெண், தனது கணவன் முன்பே அவரைப் பற்றியும், அவர் செல்போனில் உள்ள பல பெண்களுடனான தொடர்பு பற்றியும் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த கணவனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.