தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் சௌந்தரராஜா வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடித்து வெளிவந்த சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நெகட்டீவ் கதாபாத்திரத்தில் நடித்து  பிரபலமடைந்தார்.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா, தளபதி விஜய்யின் தெறி மற்றும் பிகில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தர்மதுரை, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் மற்றும் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் சௌந்தரராஜா நடித்துள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜாவுக்கு, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். நடிகர் சௌந்தரராஜா மற்றும் தமன்னா தம்பதியருக்கு நேற்று (நவம்பர் 14) அழகிய குழந்தை பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சௌந்தரராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று இந்த பூமிக்கு வந்த என் ஆசை மகனுக்கு என் முதல் பரிசாக இந்த மரக்கன்று…. உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதங்களும் என் நெஞ்சார்ந்த நன்றி... என தெரிவித்து பிறந்த பெண் குழந்தைக்கு மரக்கன்று கொடுத்து சௌந்தரராஜா வரவேற்றுள்ளார். சௌந்தரராஜா மற்றும் தமன்னா தம்பதியருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.