“இந்தியாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும், கடந்த1947 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் பிச்சை தான்” என்றும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தி உள்ளது.

பாலிவுட் நடிகை  கங்கனா ரணாவத் சமீபத்தில் சர்ச்சைக்குறிய வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால், அவர் தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான், நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன், மும்பை போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார். 

இந்த புகாரில், “காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதாக” குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை கங்கனா ரணாவத், “பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி” என்றுமி, காங்கிரஸ் கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். 

முக்கியமாக, “உண்மையில் இந்தியாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும், ஆனால், கடந்த 1947 ஆம் ஆண்டு கிடைத்தது வெறும் பிச்சை தான்” என்றும், இந்திய சுதிந்திரம் அடைந்த நாளையும், அன்றைய தினத்தையும் மிகவும் கொச்சைப் படுத்தும் விதமாக அவர் பேசினார்.

நடிகை கங்கனா ரணாவத்தின் இந்த ஆணவ பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சியினர் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் தற்போது முறைப்படி புகார் அளித்து உள்ளனர். 

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன், மும்பை போலீஸாரிடம் அளித்துள்ள புகாரில், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 504, 505 மற்றும் 124 A இன் கீழ் இந்த புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக” குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசால் “பத்மஸ்ரீ விருது” வழங்கப்பட்டது.

அப்போது, “பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு விருது கொடுத்தது தவறு” என்று, அப்போது பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் தான், தனது விஸ்வாசத்தை பாஜகவிற்கு காட்டும் விதமாக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசுவதாக நினைத்து, “இந்திய சுதந்திரத்தை கொச்சைப் படுத்தும் விதமாக” பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேசியது, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சிகளையும், பல்வேறு எதிர்ப்புகளையும் கிளப்பி உள்ளது.

ஆனால், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இந்திய சுதந்திரத்தைப் பற்றி மிகவும் இழிவாக பேசி உள்ளதற்கு, இதுவரை பாஜக தலைவர்கள் யாரும் வாய் திறந்து எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. இதனால், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக இணையத்தில் மிகப் பெரிய கருத்தும் யுத்தம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.