கோடீஸ்வரரின் மனைவி கடந்த மாதம் கள்ளக் காதலன் உடன் ஓடிப்போன நிலையில், தான் எடுத்து சென்ற பணம் எல்லாம் தீர்ந்ததால் தற்போது மீண்டும் கணவனிடமே வந்து சேர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் காஜ்ரானா பகுதியைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் 45 வயதான மனைவி ஒருவர், தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ டிரைவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டு, அவருடன் சில மாதங்கள் பழகி வந்தார்.

இதனையடுத்து,  அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, தனது கணவனை விட்டு கள்ளக் காதல் உறவில் இருந்த ஆட்டோ டிரைவருடன் அந்த கோடீஸ்வரரின் மனைவி பல லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார்.

அதாவது, அந்த கோடீஸ்வரரின் மனைவி வீட்டை விட்டு ஓடும் போது, அவர் வீட்டிலிருந்து சுமார் 47 லட்சம் ரூபாய் பணத்தையும், வீட்டின் லாக்கரில் இருந்த பல ஆபாரண தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டு, சென்றார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த கோடீஸ்வரர், தன் பெயரை வெளியே வெளியிட விருப்பாத நிலையில், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கோடீஸ்வரரின் மனைவியுடன் ஓடிப்போன சம்மந்தப்பட்ட ஆட்டோ டிரைவரையும், கோடீஸ்வரரின் மனைவியையும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

பின்னர், ஆட்டோ டிரைவரின் நண்பர்களை பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் 34 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே போலீசாரால் மீட்க முடிந்தது. 

மீதமுள்ள 13 லட்சம் ரூபாய் பணம் ஓடிப்போன கோடீஸ்வரரின் மனைவியிடம் இருந்தது. 

எனினும், கோடீஸ்வரரின் மனைவி மற்றும் அந்த ஆட்டோ டிரைவர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையில், போலீசாரும் இவர்கள் இவரையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப்போன அந்த கோடீஸ்வரரின் மனைவி, திடீரென்று இந்தூர் காஜ்ரானா காவல் நிலையத்தில் ஆஜரானார். 

அங்கு, அவரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தியபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. 

அதாவது, “தனது கோடீஸ்வர கணவர், வீட்டில் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், அவரது தொல்லை தாங்க முடியாத காரணத்தால், நான் எனது கஷ்டங்களை எல்லாம் இந்த ஆட்டோ டிரைவரிடம் சொன்னேன் என்றும், அதன் பிறகு எனக்கும் அவருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டு, அதன் பிறகே நாங்கள் வீட்டை விட்டு ஓடியதாகவும்” கூறியிருக்கிறார்.

மேலும், “தற்போது நான் என் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும்” அந்த பெண் கூறியிரக்கிறார். இதனைக் கேட்டுக்கொண்ட போலீசார், அந்த கோடீஸ்வரரை அழைத்து அவரின் விருப்பத்தையும் கேட்டு இருக்கிறார்கள். 

அப்போது, அவரும் தன் மனைவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக, தனது விருப்பதை, போலீசாரிடம் அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன், வீட்டை ஓட்டு ஓடும் போது அந்த கோடீஸ்வரரின் மனைவி எடுத்துசென்ற பணத்தில் 34 லட்சம் ரூபாய் பணம் போலீசாரால் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், மீதியிருந்த 13 லட்சத்தை மட்டுமே அந்த பெண் செலவு செய்து இருப்பதும், இவற்றுடன் வீட்டில் இருந்து அவர் எடுத்துச் சென்ற தங்க நகைகள் எல்லாம் தன்னிடம் இருப்பதாகவும்” இந்த பெண், தனது கணவரிடம் கூறியிரக்கிறார். 

இனையடுத்து, அந்த கோடீஸ்வரரின் மனைவியை, அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, கணவர் தொல்லையால் ஆட்டோ டிரைவருடன் ஓடிப்போன மனைவி, வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற பணம் எல்லாம் தீர்ந்த பிறகு, மீண்டும் கணவரிடமே திரும்பி அவந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இது பேசும் பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.