ஒன்றாக சேர்ந்த வந்த 4 காதலிகள்.. வேறு வழியில்லாம் விஷம் குடித்த காதல் ரோமியோ! காப்பாற்றிய காதலிகளால் ட்விஸ்ட்க்கு மேல ட்விட்ஸ்..
ஒன்றாக சேர்ந்த வந்த 4 காதலிகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறிய காதலன், வேறு வழியில்லாம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
90 ஸ் கிட்ஸ் இளைஞர்களில் சிலருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் அவர்கள் உன்டிக்கட்டையாக இன்றும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சில 2K கிட்ஸ் இளைஞர்கள் காதல் என்ற பெயரில் காட்டும் அலப்பறைகள் எல்லை மீறிப்போய் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த சுபமோய் கர் என்ற இளைஞர், அந்த பகுதியில் காதல் ரோமியோவாக வலம் வந்துகொண்டு, வசமாக சிக்கியிருக்கிறார்.
அதாவது, அந்த காதல் ரோமியோ ஒரே நேரரில் கிட்டதட்ட 4 பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி, ஒரே நேரத்தில் 4 இளம் பெண்களை காதலித்து வந்திருக்கிறார்.
மேற்கு வங்கம் கூச் பெஹார் பகுதியை சேர்ந்த சுபமோய் கர், அந்த பகுதியில் உள்ள மருத்துக்கடையில் சேல்ஸ் மேனாக வேலை பார்த்து வருகிறர்.
இந்த சூழலில் தான், அந்த இளைஞனின் வீடு அமைந்துள்ள காளி கோயிலில் நடந்த விசேச பூஜையில் கலந்துகொண்டுவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பி வேலைக்கு செல்வதற்காக கிளம்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது, அந்த இளைஞரின் வீட்டிற்கு 4 பெண்கள் சேர்ந்து ஒன்றாக வந்திருக்கிறார்கள்.
இப்படியாக, 4 பெண்கள் ஒன்றாக சேர்ந்து வந்ததை பார்த்த சுபமோய் கர், கடும் அதிர்ச்சியடைந்து அடுத்து என்ன செய்வது என்றேத் தெரியாமல் அப்படியே திகைத்துப் போய் நின்று உள்ளார்.
அதாவது, அந்த 4 இளம் பெண்களையும், சுபமோய் கர் ஒரே நேரத்தில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து காதல் ரசம் சொட்ட சொட்ட பேசிக்கொண்டு வந்திருக்கிறார்.
இந்த விசயத்தை, சம்மந்தப்பட்ட 4 இளம் பெண்களுக்கும் தெரிய வந்த நிலையில், தனது காதலனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று திட்டம்போட்டே அந்த 4 இளம் பெண்களும் ஒன்றாக கூடி பேசி முடி செய்துகொண்டு அதன்படியே சுபமோய் கர் வீட்டிற்கு தற்போது வந்திருக்கிறார்கள்.
4 காதலிகளும் இப்படி ஒரே நேரத்தில் தன்னை சுற்றி வளைப்பார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்க்காத அந்த காதலன், சற்றும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அப்படியே உறைந்து போய் நின்றுக்கொண்டிருந்து உள்ளார்.
இதனையடுத்து, அந்த 4 இளம் பெண்களும் காதலன் சுபமோய் கரிடம் ஒரே நேரத்தில் சுற்றி வளைத்து நின்றுக்கொண்டு மிக கடுமையாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஒரு கட்டத்திற்கு பிறகு, சுபமோய் கரால் அந்த 4 காதலிகளின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் அப்படியே திணறிப்போனவனாய், வேறு வழியில்லாம் வீட்டில் இருந்து விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இதனனால், பதறிப்போன அந்த 4 காதலிகளும் அந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், காதலன் தற்கொலைக்கு முயன்றதல், சம்மந்தப்பட்ட 4 இளம் பெண்களும், அந்த காதலன் மீது காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.