விஜய் டிவியில் கடந்த 2019 பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் தொடராக உருவெடுத்துள்ளது பாரதி கண்ணம்மா.பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வருகிறார்.ரூபா ஸ்ரீ,கண்மணி மனோகரன்,பாரினா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.500 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விஜய் டிவியின் முக்கிய தொடராக அசத்தி வருகிறது.

இந்த தொடரில் ரோஷ்ணி ஹரிப்ரியன் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இந்நிலையில் சில காரணங்களால் இவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.இவருக்கு பதிலாக டிக்டாக் மூலம் பிரபலமான விணுஷா தேவி புதிய கண்ணம்மாவாக நடிக்கிறார்.

இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து பெரிய வரவேற்பை பெற்று வந்த ரோஷ்ணி திடீரென விலகியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.தனது கடைசி எபிசோடை முடித்துவிட்டு விடைகொடுத்து ரோஷ்ணிக்கு சீரியல் குழுவினர் கேக் வெட்டி பிரியாவிடை கொடுத்தனர்.