16 வயதான சிறுமியை காரில் கடத்தி, ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவாவில் தன் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவாவில் உள்ள போர்வோரிம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அத்துடன், இந்த 16 வயதான சிறுமி அங்குள்ள பள்ளியல் படித்து வருகிறார். 

இப்படியான சூழலில், இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபரின் அறிமுகம் கிடைத்து உள்ளது. இதனையடுத்து. அந்த 31 வயதான நபரிடம் இந்த சிறுமி நட்பாக பழகி வந்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த சிறுமியிடம் தொடக்கத்தில் நல்ல முறையில் பழகி அவர், அந்த சிறுமியின் நம்பிக்கையை பெற்று உள்ளார்.

அதன் பிறகு, அந்த நபர் அந்த சிறுமியை கடந்த 3 ஆம் தேதி காலை 11 மணி அளவில் “தனது காரில் தன்டைய காரில் ஏற சொல்லி” இருக்கிறார். அதற்கு அந்த சிறுமி, “ஏன்?” என்று கேட்டதற்கு, “நம்ம அப்படியே ஜாலியாக ஒரு லாங் டிரைவ் போய்வரலாம்” என்று, கூறி, அ்த சிறுமியை, தனது காரில் ஏற்றியிருக்கிறார். 
இதனால், அந்த சிறுமியும் தனது நண்பர் தானே அழைக்கிறார் என்று நம்பி, அவரது காரில் சென்றார்.

அப்போது, அந்த 31 வயதான ஆண் நண்பர், அந்த காரில் போகும் போது அந்த 16 வயதான சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, “காரிலிருந்து என்னை இறக்கி விடு” என்று, சத்தம் போட்டு கத்தியிருக்கிறார்.

அத்துடன், காரியல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த சிறுமி, காருக்குள் இருந்படியே, “யாராவது என்னை காப்பாத்துங்க” என்றும், கடும் கூச்சலிட்டு  கத்தி சத்தம் போட்டு, உதவிக்கு ஆட்களையும் அழைத்திருக்கிறார். 

ஆனாலும், காருக்குள் இருந்த அந்த நபர், இதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்தது உள்ளார். 

இதனையடுத்து, அந்த சிறுமியை அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து, அந்த பகுதியில் உள்ள சற்று தொலைவில் ரோட்டோரத்தில் இறக்கி விட்டு விட்டு, தப்பிச் சென்று இருக்கிறார்.

இதனையடுத்து, அந்த சிறுமி எப்படியோ தனது வீட்டிற்கு வந்து சேர்ந்த நிலையில், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து பெற்றோரிடம் கூற பயந்துகொண்டு, யாரிடமும் எதுவும் சொல்லாமல் தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று, தற்கொலை செய்துகொள்ளவதற்காக அங்கிருந்து கீழே குதித்து உள்ளார்.

இதில், அந்த பெண் மாடியிலிருந்து கீழே குதித்ததும், அந்த பெண்ணுக்கு உயிருக்கு எதுவும் ஆகாத நிலையில், அந்த பெண்ணின் காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு உள்ளது.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு, உடனடியாக அந்த பெண்ணை மீட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அந்த பெண்ணுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட 31 வயதான நபரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.