“எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக” காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் வினோதமாக புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சமீபத்தில் தான் தமிழ்நாட்டில் “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்ற பெயரில் திரைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பாக அதன் காட்சிகள் பேசப்பட்டன.

அந்த படத்தில், படத்தின் நாயகன் “எனது மாடுகளைக் காணவில்லை” என்று, காவல் நிலையத்தில் கொடுப்பார். 

இந்த படத்தில் வருவது போன்ற அதே காட்சியானது தற்போது, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நடந்திருக்கிறது.

அதாவது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டம் நயாகன் பகுதியைச் சேர்ந்த பாபுலால் ஜாதவ் என்பவர், விவசாயாக வேலை பார்த்து வருகிறார்.

இவர், தனது வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். தினமும் நன்றாக பால் கொடுத்துக் கொண்டிருந்த அந்த எருமை மாடு, கடந்த சில நாட்களாகவே பால் எதுவும் கரக்கவில்லை என்று தெரிகிறது. 

இதனால், விவசாயி பாபுலாலால், தனது மாடு பால் தராததால், அவராலும் பால் கறக்க முடியவில்லை.

அத்துடன், “எருமை மாடு நன்றாக பால் கொடுத்து வந்த நிலையில், திடீரென பால் கொடுப்பதை நிறுத்தி விட்டதால்” கடும் மன வேதனை அடைந்த விவசாயி பாபுலால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், அங்குள்ள தனது கிராமத்து மக்களிடம் விசாரித்து இருக்கிறார்.

ஆனால், அவர்கள் யாரிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால், அவருக்குள் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக, “தனது மாடு, பால் கொடுக்காமல் போனதற்கு யாரோ தனது மாட்டிற்கு பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள்” என்று யாரோ ஒருவர் சொன்னதை இந்த விவசாயி நம்பியிருக்கிறார்.

அத்துடன், “மாட்டிற்கு பில்லி சூனியம் வைத்தவர்கள் பற்றிய போலீஸில் புகார் கொடுக்கும் படியும்” அந்த நபர் ஆலோசனை கூறியிருக்கிறார்.

அதனை நம்பிய அந்த விவசாயி, அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று, “எனது எருமை மாடு பால் கொடுப்பதே இல்லை என்றும், இது குறித்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, வலியுறுத்தி புகார் அளித்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, வீட்டில் கட்டப்பட்டிருந்த தனது மாட்டை, அந்த காவல் நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு வந்து “மாட்டை பால் கறக்க வைக்க உதவி செய்யுமாறு” போலீசாரிடம் கெஞ்சி கேட்டிருக்கிறார். 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த போலீசார், “உண்மை நிலைமையை அந்த விவசாயிக்கு புரிய வைத்து, அவரை சமதானம் செய்து” போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.