ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை வடக்கு மாவட்ட கழக சார் மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நூகர்வோர் கூட்டுறவு இணையத்தின்  தலைவருமான  ஆர் எஸ் ராஜேஷ் ஏற்பாட்டில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு 1500 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு  புடவை மற்றும் 5 கிலோ அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்வில்  இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.எம்.பரமசிவம் எம்.எல்.ஏ,  வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது மகளிர் சுய உதவிக் கூட்டத்தில் மதுசூதனன் பேசிய போது.. அண்ணா தி.மு.க. இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் வல்லமை மகளிர் குழுக்களுக்கு முழு பங்கு உள்ளது.கடந்த காலத்தில் அண்ணா தி.மு.க. பேரியக்கத்தை துவக்கிய புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும் தேர்தல் காலத்திலும் காலநேரம் பார்க்காமல் இரவு பகல் பாராமல் மக்களுக்காகவே உழைத்த உத்தமர்.அவர் வழியை பின்பற்றி புரட்சி தலைவி அம்மா அவர்கள் செயல்பட்டு இந்திய தேசத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இயக்கத்தை  வலுப்படுத்தினார்.

அப்பேற்பட்ட இயக்கத்தை எதிர் கொள்ள ரஜினி - கமல் மட்டும் அல்ல ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் இனி அம்மா வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை யாராலும் அசைத்து பார்க்கவே முடியாது. தமிழக மக்கள் நலனை முழுமையாக புரிந்து கொண்டு கொரோனா காலத்திலும், புயல் மழை,வெள்ள காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நெஞ்சங்களில்  நீங்கா இடம் பெற்று இன்று தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  என்று கூறினார்.

எப்பொழுதும் மக்கள் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படும் அதிமுக  அரசு ஐந்து முறை அல்ல இனி வருகின்ற அனைத்து  சட்டமன்ற தேர்தலிலும் அண்ணா தி.மு.க தலைமையிலான அரசு தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்  என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்த கடமைபட்டுள்ளேன் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது 200 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று இரவு பகலாக, ரத்த வாந்தி எடுத்த போதெல்லாம் அண்ணாவின் கட்சி வெற்றி பெற்றது. எம்ஜிஆர் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டவர். அப்படிப்பட்ட எம்ஜிஆர் ஐந்து கூட்டங்களில் மட்டும் தான் பேசுவேன், நான்கு கூட்டங்களில் மட்டும் தான் பேசுவேன் என கூறியதில்லை எத்தனை கூட்டங்களாக இருந்தாலும் விடியவிடிய பிரச்சாரம் மேற்கொள்பவர்.எம்ஜிஆர் அடிமட்ட தொண்டன் தான் கட்சியின் நாடி நரம்பு எல்லாம் என்று கூறியவர்.அவர் வழி என்றால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.எம்ஜிஆரால் 1972 இல் உருவாக்கப்பட்ட இயக்கம் கலைஞர் கருணாநிதி அண்ணாவிற்கு துரோகம் செய்ததால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக என்றும்,எம்ஜிஆர்  வழிக்கு யாரும் நிகராக இருக்க முடியாது என்பதை ஆணித்தனமாக  தெரிவித்துக்கொள்கிறேன் எனவும்  மதுசூதனன் தெரிவித்தார் 

கமல் எம்ஜிஆர் ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த மதுசூதனன்,   கமல் எம்ஜிஆரை பார்த்து இருப்பாரா? எம்ஜிஆர் வழியில் என்றால் எம்.ஜி.ஆர் எப்படி இருப்பார் என்று அவருக்கு தெரியுமா?எனவும்  இரவு 2 மணி ஆனாலும் கட்சி தொண்டர் உடன் போனில் தொடர்பு கொண்டு பேசக்கூடியவர் எம்ஜிஆர், அவர்  ஒருவரே தலைவர் அவருக்கு நிகர் ஜெயலலிதாதான் என்று கூறினார்.
 ரஜினி கமல் இணைந்து போட்டியிட்டால் அதிமுகவிற்கு  எவ்வித பாதிப்பும் இருக்காது  என்றார்.தமிழகத்தில் இனி ரஜினி - கமல் என எந்த நடிகர் வந்தாலும் அம்மாவின் வழியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை யாராலும் அசைக்க முடியாது என கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் கூறினார்.
இது எம்ஜிஆரின்   இயக்கம் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை செய்யக்கூடிய இயக்கம். அதன் வழியில் ஜெயலலிதா  ,தற்போது எடப்பாடி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார் .  மேலும் சிறையில் இருக்கும் சசிகலா வருகை குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார் மதுசூதனன்.