மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களால் 5 முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அரசியலில் தனது ஆளுமையால் தனி இடத்த ஒரே பெண் முதல்வர். 2016 ம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் டிசம்பர் 5-ந் தேதி உயிரிழந்தார்.


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டு வருவதாகவும், இந்த கோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.  அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், கட்டப்பட்டு வரும் இந்த கோவில் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட வந்து போது , ‘’ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தெய்வமாகக் கருதி  வணங்குகின்ற  ஒன்றரைக் கோடி தொண்டர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள்.

இந்த கோயிலில் ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலை மற்றும் எம்ஜிஆரின் 6 அடி உயர வெண்கல சிலையும் அமைக்கப்பட உள்ளது. அனைவரும் வழிபடும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்ட இருக்கிறோம். விரைவில், திருப்பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.  


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா இல்லம்  அரசுடைமை ஆக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு இருக்கிறது.