மருமகளின் கள்ளக் காதலை தட்டி கேட்ட மாமியார் - மாமனாரை கட்டிப்போட்ட மருமகள், தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து அவர்களை தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வயதான தம்பதிகளான மஞ்சித் சிங், அவரது மனைவி குர்மீத் கவுர் ஆகியோர் தங்களது மகன் ரவீந்தர் சிங்கோடு வசித்து வந்தனர்.

இப்படியான சூழலில் தான், அந்த வயதான தம்பதிகள், தங்களது மகன் ரவீந்தர் சிங்கிற்கு, முறைப்படி பெண் பார்த்து சமீபத்தில் திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு, வீட்டுக்கு வந்த அந்த மருமகள், அதே பகுதியில் உள்ள ஒரு நபருடன் கள்ளக் காதல் உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த விசயம், அந்த வயதான தம்பதிகளான மாமியார் மற்றும் மாமனாருக்குத் தெரிய வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த வயதான தம்பதிகள் இருவரும், தங்களது மருமகளை அழைத்து அவருக்கு அறிவுரை கூறி, அவரை கண்டித்து உள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மருமகள், தனது கள்ளக் காதலன் உடன் சேர்ந்து, அந்த வயதான தம்பதியை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவில், வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் இருவரையும் ஒந்றாக நாற்காலியில் கட்டி போட்டு உள்ளனர்.

பின்னர், அந்த வயதான தம்பதியினரை, அந்த கள்ளக் காதலர்கள் இருவரும் சேர்ந்து தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

இதனால், அந்த வயதான தம்பதியினர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதனையடுத்து, அந்த மருமகள், தனது கள்ளக் காதலன் உடன் சேர்ந்து அந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து, அன்று இரவு வீட்டுக்கு வந்த அந்த வயதான தம்பதியரின் மகன் ரவீந்தர் சிங், தன் பெற்றோர் தீயில் கருகி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதிருக்கிறார்.

இதனையடுத்து, அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலைகளை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியார் மற்றும் மாமனாரை எரித்து கொலை செய்து விட்டு, தப்பியோடிய கள்ளக் காதலர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது இருவரையும் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தையும் போலீசார் மீட்ட நிலையில், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.