முதலமைச்சர் முன்னிலையில், காங்கிரஸ் எம்.பியும் - பாஜக அமைச்சரும் மேடையிலேயே மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி, இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

அதாவது, கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றிருந்த நிலையில், அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அங்கு பாஜக ஆட்சியை பிடித்தது. இது, நாடே அறிந்த அரசியல் குடுமிபிடி சண்டையாக இருந்தபோதிலும், கடந்த காலங்களில் நாடே இதனை வேடிக்கைப் பார்த்து நகைத்தது.

இந்த சூழலில் தான், கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் நேற்றைய தினம் அந்த மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பெங்களூரு நிறுவனர் நடபிரபு கெம்பேகவுடா ஆகியோரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. 

அரசு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் கர்நாடக பாஜக அமைச்சர் அஸ்வத் நாராயண், காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது, அந்த நிகழ்ச்சியில் அந்த மாநில முதலமைச்சர், கர்நாடக பாஜக அமைச்சர் அஸ்வத் நாராயணனும், காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் ஒரே மேடையில் அமர்ந்தருந்தனர்.

அப்போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், மேடையில் இருந்த பாஜக அமைச்சர் அஸ்வத் நாராயணனை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு திடீரென்று பிரச்சனை ஏற்பட்ட நிலையில், மேடையிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்த இந்த நிகழ்ச்சி, தொடங்கிய அடுத்த சில நிமிடத்திலேயே ஒரே மேடையில் இருந்த கர்நாடக பாஜக அமைச்சர் அஸ்வத் நாராயணனும், காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷூம் திடீரென்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு நேருக்கு நேரகமாக கடும் மோதலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரம் பார்த்து பாஜக அமைச்சர் அஸ்வத் நாராயணன் கோபத்தில் மேடையில் பேசும் போது, காங்கிரஸ் எம்.பி.யைப் பார்த்து “யார் அந்த மனிதர்? உங்கள் வேலையை காட்டுங்கள். ராமநகர மக்களுக்கு வளர்ச்சியை கொண்டு வர நாங்கள் இங்கு வந்து உள்ளோம். மற்றவர்களை போல் அல்ல. அடிக்கல் நாட்டுவார்கள். ஆனால், திட்டங்களை முடிக்க மாட்டார்கள்” என்று, கடுமையாக சாடி பேசினார். 

பாஜக அமைச்சரின் இந்த பேச்சு தன்னையும், சக காங்கிரஸ் கட்சியையும் கிண்டல் செய்வதாக உணர்ந்த  காங்கிரஸ் எம்.பி. சுரேஷ், அஸ்வத் நாராயணின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கையிலிருந்து எழுந்தார்.

அத்துடன், அவர்கள் இருவரும் மேடையில் நேருக்கு நேர் நின்று வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியனர் மேடையில் ஏறி பாஜக அமைச்சர் நாராயணனிடம் இருந்து மைக்க பறிக்க முயன்றார்.

இதனையடுத்து, அந்த மேடையில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தினர். 

ஆனாலும், காங்கிரஸ் எம்.பி. சுரேஷை அங்கிருந்த பாதுகாவலர்கள் அங்கிருந்து அவரை மட்டும் இழுத்து சென்றனர்.

இதனால், பாஜக அமைச்சர் அஸ்வத் நாராயண், அந்த மேடையில் அமர்ந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மைக்கை எடுத்து பேசுகையில், “அம்பேத்கர் மற்றும் கெம்பேகவுடாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு யாரும் தங்களின் ஈகோவை கொண்டு வர வேண்டாம்” என்று, கேட்டுக்கொண்டார்.

“ராமநகரா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவே முதல்வரான நான் இங்கு வந்து உள்ளேன் என்றும், கட்சி பேதமின்றி அனைவரின் ஒத்துழைப்போடு வளர்ச்சி பணிகள் நடக்கும் என்றுமு், வளர்ச்சியுடன் அரசியலை கொண்டு வர வேண்டாம் நான் இந்த மேடையில் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், அந்த மாநில முதலமைச்சர் பேசினார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.