கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகங்கள் கொண்டாடும் மிகச்சிறந்த நடிகரான தனுஷ், முன்னதாக ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்களான ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் தி க்ரே மேன் படத்தை நடித்து முடித்துள்ளார். 

தொடர்ந்து தமிழில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் ஆகிய துறை படங்களும் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் முதல் முறையாக டோலிவுட்டில் களமிறங்கும் தனுஷ் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் வாத்தி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்குகிறார்.

தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் வாத்தி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் வாத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

முன்னணி தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் சிறப்பு விருந்தகனராக கலந்து கொண்டு படத்தை தொடங்கி வைத்தார்தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெண்டாகும் வாத்தி படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் இதோ…