நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் இருந்து “கர்ணன்” பட பாணியில் கீழே குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நடிகர் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான  “கர்ணன்” படத்தில், தனுஷின் ஊரில் வழியாக எந்த பேருந்தும் நிற்காமல் செல்லும். இதனால், ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த தனுஷ், அந்த ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் இருந்து, அப்படியே கீழே குதிப்பார். அதன் பிறகே அந்த பேருந்து அங்கே நிற்கும். அப்படியான ஒரு சம்பவம் தான், தற்போது  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்து உள்ள சினி கிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகள் நவ்யாஸ்ரீ என்ற இளம் பெண், கெலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

இந்த மாணவி, நேற்று மாலை கெலமங்கலத்தில் இருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் ஏறி, சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு அந்த மாணவி நவ்யாஸ்ரீ வந்திருக்கிறார்.

ஆனால், அந்த மாணவி ஏறிய அந்த அரசுப் பேருந்து, சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், வேகமாக சென்று உள்ளது. இப்படி, பேருந்து நிற்காமல் போனதால், கடும் அதிரச்சி அடைந்த அந்த மாணவி, ஆவேம் அடைந்த நிலையில், ஓடும் பேருந்திலிருந்து அப்படியே கீழே குதித்து உள்ளார்.

அதன்படி, அந்த பள்ளி மாணவி ரோட்டில் விழுந்த வேகத்தில், அந்த பேருந்தின் பின்பக்க டயரில் மாணவியின் கை மற்றும் காலின் மீது ஏறி இறங்கி இருக்கிறது. இதில், பலத்த காயம் அடைந்த அந்த மாணவியை மீட்ட சக பயணிகள், அதே பேருந்தில் அங்குள்ள உத்தனப்பள்ளி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அனுமதித்தனர். 

அங்கு அந்த மாணவிக்கு முதல் உதவி அளித்த நிலையில், அதன் பிறகு, உயர் சிகிச்சைக்காக அங்கிருந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 

அங்கு, மாணவி உடலிலிருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறிதால், அங்கிருந்து இன்னும் உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

ஆனால், அங்கு தீவிர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், “அரசுப் பேருந்து, வழக்கம் போல் நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றதே மாணவி கிழே குதிக்க முக்கிய காரணம்” என, மாணவியின் உறவினர்கள் போலீசாரிடம் குற்றச்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக, உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.