நடிகர் ஜெயம் ரவி, யோகி பாபு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இதனையடுத்து சமீபத்தில் தனது அடுத்த திரைப்படத்தை தொடங்கினார்.

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் கவர்மெண்ட் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தை பிரதீப் அரங்கநாதன் இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடிகர் சத்யராஜ், நடிகை  ராதிகா சரத்குமார் மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்யராஜ் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் மகிழ்ச்சியாகவும் உரையாடல்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது  பிரதீப் ரங்கநாதன் & ஏஜிஎஸ் உடன் இணைந்து நல்ல வழியில் புத்தாண்டு தொடங்கப்பட்டது” என தெரிவித்து ஷூட்டிங் ஸபாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ட்ரெண்டாக்கி வரும் அந்த ஷூட்டிங் ஸபாட் புகைப்படம் இதோ…