இந்திய திரை உலகின் மிகப்பெரிய இசை ஆளுமையாக வலம் வருகிறார் ஆஸ்கார் தமிழன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். புயலின் தீவிரம் கொஞ்சம் கூட குறையாமல்  ரசிகர்களின் மனங்களை மையம் கொண்டு இசை மழை பொழிய இசைப்புயலின் அடுத்தடுத்த படங்கள் காத்திருக்கின்றன.  

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன், சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான், சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு & பத்து தல மற்றும் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் புதிய படங்கள் தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் தயாராகி வருகின்றன.

மேலும் மலையாளத்தில் ஃபகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ள மலையன் குஞ்சு, பிரித்திவிராஜின் ஆடுஜீவிதம் மற்றும் பாலிவுட்டில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் என நீள்கிறது இசைப்புயலின் படங்களின் பட்டியல். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளான கதீஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. முன்னதாக எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடன் இணைந்து கதீஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து கதீஜா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருங்கால கணவர் ரியாஸ்தீன் ஷேக் முஹம்மது மற்றும் தனது புகைப்படத்தை பகிர்ந்து, 

கடவுளின் அருளால் எனக்கும், வளர்ந்து வரும் தொழில் அதிபரும் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் முஹம்மது உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் டிசம்பர் 29-ம் தேதி எனது பிறந்தநாள் தினத்தன்று நெருங்கிய உறவினர்களுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.. 

என தெரிவித்துள்ளார். கதீஜா ரஹ்மான் இன் இன்ஸ்டாகிராம் பதிவு இதோ…