தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி,  தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் மெகா ஸ்டார். முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக தயாராகிவரும் காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை முன்னணி தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக சிரஞ்சீவி நடிப்பில் தயாராகிறது போலா ஷங்கர். தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான #Chiru154 படத்திலும் நடித்து வரும் சிரஞ்சீவி, அடுத்து சலோ & பீஷ்மா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் புதிய திரைப்படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது.

இதனிடையே முன்னணி தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 4-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாக உள்ளது.  ஆச்சார்யா படத்தில் காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே கதாநாயகிகளாக நடித்துள்ளனர் மணிசர்மா இசையமைத்துள்ளார் இந்நிலையில் ஆச்சார்யா படத்திலிருந்து சானா கஷ்டம் இந்த துள்ளலான பாடல் தற்போது வெளியானது. அந்தப் பாடல் இதோ...