தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக தனது கதாபாத்திரங்களிலும் சிறந்த நடிப்பிலும் மக்களின் மனதை கொள்ளையடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா என மூவரும் முன்னணி கதாபாத்திரங்களில்  நடிக்க,  இளையதிலகம் பிரபு , ரெட்டின் கிங்ஸ்லீ, இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் நடன இயக்குனர் கலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

இதுவரை வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரெண்டு காதல் & TWO TWO TWO பாடல்கள் நல்ல வரவேற்பைப்பெற்ற நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் 3வது பாடலாக நான் பிழை எனும்  புதிய பாடல் தற்போது வெளியானது.அந்த பாடலை கீழேஉள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.