திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காண்பித்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ரத்தம் கொதிக்க, நரம்புகள் புடைக்க காளையாய் சீறிப்பாயும் சீமானை எல்லோருக்கும் பிடிக்கும். அவரது பேச்சில், ஒரு வீரம் இருக்கும், ஒரு நியாயம் இருக்கும். ஆனால், பொது மக்கள் முன்னிலையில் மேடையிலேயே செருப்பை கழற்றி சுழற்றும் சீமானை இது வரை தமிழகம் கண்டதில்லை.

அநியாங்களுக்கு எதிராக சீறிப்பாய்ந்த சீமானைப் பார்த்த தமிழகம், தற்போது அநாகரிமான முறையில் மேடையிலேயே செருப்பை தூக்கி நின்றதை யாரும் ரசிக்கவில்லையே என்று தான் தோன்றுகிறது.

இந்த காட்சிகள் சீமானுக்கு புதிது என்றாலும், சீமானை இப்படி பார்ப்பதும் தமிழக மக்களும் இது புதிதுதான்.

அதாவது, பாஜகவுக்கு ஆதராவாக தொடர்ந்து இணையத்தில் பேசி வரும் மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில், அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.

இதனால், 4 நாளில் அவர் வழக்கில் இருந்து வந்து உள்ளார். இது தமிழக அரசுக்கு அவமானம் எனவும், திமுக அரசு தான் உண்மையான சங்கி எனறும்கூறிய சீமான், தனது காலில் இருந்த செருப்பை தூக்கி காண்பித்து திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் கலந்துக் கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்?” என்று, வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய சீமான், “அப்படி என்றால் யார் சங்கிகள்?” என்றும், அவர் மிக கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பினார்.

அந்த நேரத்தில் தான், யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காண்பித்தார். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.