6 முதல் 12 வரை தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

anbil mahesh poiyyamozhi

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா எனும் கொடிய வைரஸ் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இந்த கொரோனா வைரசை அழிப்பதற்கான ஒரே ஆயுதமான தடுப்பூசி கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. உலகம் முழுவதும் பல்வேறு வகையிலான தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 

இந்த தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் அதே வேளையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது உருவை மாற்றி வெவ்வேறு வகையிலான வைரசாக உருவெடுத்து தலைவலி கொடுத்து வருகிறது.அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றின. இதில் டெல்டா வகை கொரோனா உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சூழலில் தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் வந்துவிட்டது. ஒமிக்ரான் என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த மாதம் 24-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்பொழுது தமிழகத்திலும் ஒருவருக்கு  ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 3-ம் தேதி முதல் 6 -12-ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் அனைத்து கல்லூரிகள் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3-ம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் தினசரி வகுப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் 6 முதல் 12 வரை தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
6 முதல் 12 -ம் வகுப்புக்கு தினசரி வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பர் 25-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளோம். தமிழகத்திற்க்குள் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தினசரி வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பரில் 25-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் திருப்புதல் தேர்வுகள் நடக்கும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்தார்.

மேலும் ஒமிக்ரான் பரவல் குறித்து தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.