தெலுங்கு  திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் , முன்னணி நட்சத்திர நடிகராகவும் திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பான பாகுபலி 1&2 திரைப்படங்களுக்கு பிறகு இந்திய அளவில் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்நது இந்திய திரையுலகை கன்னட சினிமா பக்கம் திருப்பிய மெகா ஹிட் படமானன கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் சலார் படத்தில் நடித்து வரும் பிரபாஸ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இதிகாச கதைக்களமான இராமாயணத்தைத் தழுவி தயாராகும் ஆதிப்ருஷ் படத்திலும் நடித்து வருகிறார்.

முன்னதாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம். ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

UV  கிரியேஷன்ஸ் மற்றும் T-SERIES பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமான ராதே ஷ்யாம் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் ரேகைகள் பாடல் வீடியோ தற்போது வெளியானது. வைரலாகும் ரேகைகள் பாடல் வீடியோ இதோ…