டிக்டாக் மூலம் அறிமுகமாகி பலரும் தங்கள் திறமையை நிரூபித்து பலரும் நடிகர் நடிகைகளாக அசத்தி வருகின்றனர்.அப்படி டிக்டாக்கில் பிரபலமாக இருந்து ரசிகர்களை பெற்றவர் கோகிலா கோபால்.டிக்டாக் மூலம் பிரபலமான இவர் அப்போதே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

ரசிகர்கள் கொடுத்த ஊக்கத்தை அடுத்து தனது நடிப்பு திறமையை நிரூபிக்க திரைப்படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு சீன் நம்பர் 62 என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் கோகிலா, இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இதற்கிடையே விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நக்ஷத்திராவிற்கு தங்கையாக நடித்து அசத்தி வருகிறார் கோகிலா கோபால்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் விடீயோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான அன்பே வா தொடரில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார் கோகிலா கோபால்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் அடுத்தடுத்து வைக்கும் அனைத்து அடிகளும் இவர் வழியில் வெற்றிப்படிகளாக மாறி பெரிய நடிகையாக ஜொலிக்க கலாட்டா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.