சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வானதைப்போல.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த தொடர் சூப்பர்ஹிட் தொடராக உருவெடுத்துள்ளது.

தமன் குமார்,ஸ்வேதா கெல்ஜே அண்ணன் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளி வந்தனர்.தேபாஜினி இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கார்த்தி,திலக்,ப்ரீத்தி குமார்,மௌனிகா,செந்தில் குமாரி,மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் துளசியாக நடித்து அசத்தி வந்த ஸ்வேதா கெல்ஜே திடீரென விலகுவதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.இவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.இவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் இணைந்துள்ளார்.

ஏற்கனவே ஸ்வேதா விலகிய சோகத்தில் உள்ள ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தொடரின் நாயகன் தமன்குமார் விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.தொடரின் முக்கியமான கதாபாத்திரங்களான இரண்டு பேர் விளங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.