விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த தொடர் ஈரமான ரோஜாவே.திரவியம்,பவித்ரா ஜனனி முன்னணி வேடங்களில் நடித்த இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து பெரிய வெற்றி பெற்றது.பிரவீன் தேவசகாயம்,ஷியாம்,சாய் காயத்ரி,அர்ச்சனா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினர்.

இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது என்ற தகவல் சில வாரங்களுக்கு முன் கிடைத்தது.இந்த தொடரில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கேப்ரியெல்லா கார்ல்டன் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருந்தது.இதன் மூலம் முதல்முறையாக சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார் கேப்ரியெல்லா கார்ல்டன்.

மனோகர் கிருஷ்ணன் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரின் நாயகனாக சரவணன் மீனாட்சி,தேன்மொழி BA உள்ளிட்ட தொடர்களில் நடித்த சித்தார்த்  நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில தகவல்களை பதிவிட்டுள்ளார்.இந்த தொடரின் ப்ரோமோ ஷூட்டிங் தொடங்கியுள்ளதாகவும் விரைவில் இந்த ப்ரோமோ ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது.சீரியல் ஒளிபரப்பு நேரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

siddharth kumaran to play hero in eeramana rojave 2 gabriella charlton