காதல் மோதலான நிலையில், காதலன் தற்கொலை செய்துகொண்டதால், காதலியான 11 ஆம் வகுப்பு மாணவியும் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் திருப்பத்தூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து உள்ள வட புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகள் 16 வயதான பிரியங்கா தேவி, அந்த பகுதியில் உள்ள பள்ளயில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிஷன் வேலை செய்து வரும் 21 வயதான ரமணன் என்ற இளைஞரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்து உள்ளனர். 

இதனால், இவர்கள் இருவரும் நேற்று இரவு செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அவர்கள் இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

இதனால், நேற்று இரவு காதலன் ரமணன், அவரது வீட்டில் உள்ள தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக, காதலன் தற்கொலை செய்துகொண்ட தகவலை காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட அந்த  11 ஆம் வகுப்பு மாணவி, மனமுடைந்த நிலையில் காணப்பட்டு இருக்கிறார்.

இதே மன நிலையில் இருந்து குற்ற உணர்ச்சியால் தவித்த அந்த மாணவி, காலையில் திடீரென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும், கூறப்படுகிறது.

காதலர்கள் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் வாணியம்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.