சகதியான பெரிய குப்பை தொட்டிக்குள் விழுந்து போராடி வந்த பூனைக் குட்டியை காப்பாற்றும் நோக்கில், குரங்கு ஒன்று உடனே இறங்கி தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்த பிறகு, தனக்கு உதவிக்கு சிறுமியை அழைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“மனசு குரங்கைப் போன்றது” என்று, நமது முன்னோர்கள் சொல்வது உண்டு. அப்படியானல், அந்த குரங்கிற்கும், இன்னொரு மனம் இருக்கிறது என்று, இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா என்பவர், வனப்பகுதிகளில் அன்றாடம் நடக்கும் விலங்கினங்களின் குறும்புச் சேட்டைகள் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதள பக்க்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “ சேறும் சகதியுமாக உள்ள ஒரு குப்பைத் தொட்டிக்குள் ஒரு அழகான குட்டி பூனை ஒன்று எதிர்பாரத விதமாக விழுந்து உள்ளது. அந்த குப்பைத் தொட்டிக்குள் இருந்த சகதியில் சிக்கிக்கொண்ட அந்த பூனை குட்டி, வெளியே வர முடியாமல் போராடிக்கொண்டு இருந்தது.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு குரங்கு, குப்பைத் தொட்டிக்குள் சிக்கித் தவித்த அந்த பூனை குட்டியை பார்த்து உள்ளது. இதனையடுத்து, அந்த பூனை குட்டிக்கு உதவ முடிவு செய்த அந்த குரங்கு, பூனைக் குட்டியை காப்பாற்றும் நோக்கில் சேறும் சகதியாக இருந்த அந்த குப்பை தொட்டிக்குள் உடனே தனது ஸ்டைலில் இறங்கி, உடனடியாக சேற்றில் இருந்த அந்த பூனை குட்டியை தூக்கி தனது கையில் வைத்துக்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக, தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அந்த குரங்கு, கையில் பூனை குட்டி இருக்கும் போது, அந்த குரங்கால் அந்த குப்பைத் தொட்டியை விட்டு மேலே வர முடியவில்லை.

இதனால், என்ன செய்வது என்று சற்று யோசித்த அந்த குரங்கு, உடனே அந்த பூனை குட்டியை அங்கேயே ஓரமான ஒரு இடத்தில் வைத்து விட்டு, அந்த குப்பைத் தொட்டியின் மேல் புறமாக தாவி வந்துள்ளது.

அப்போது, அந்த குப்பைத் தொட்டியின் சற்று தூரத்தில் சிறுமி ஒருவள் நின்றுக்கொண்டிருந்தார். அதன்படி, அந்த சிறுமியிடம் உதவி கேட்டு அழைப்பது போல் அந்த குரங்கு அழைத்திருக்கிறது. அதன்படி, அந்த சிறுமி அங்கு வந்து பார்த்திருக்கிறார்.

அதில், குட்டி பூனை ஒன்று இருப்பதை கவனித்த அந்த சிறுமி, உடனடியாக அந்த குப்பைத் தொட்டிக்குள் குதிவித்து அந்த பூனை குட்டியை தூக்கி குப்பைத் தொட்டியின் மேல் பகுதியில் நின்றிருந்த குரங்கின் கைகளில் ஒப்படைத்தார்.

உடனே, அந்த பூனை குட்டியை தனது வயிற்றில் அரவணைத்துக்கொண்ட அந்த குரங்கு, அந்த பூனை குட்டியின் மீது அன்பு செலுத்தி, அதனை தடவி கொடுத்தது” இப்படியாக, அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.