தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்திலும், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தயாராகி வருகிறது. தற்போது இத்திரைப்படத்தின் டப்பிங் மற்றும் இறுதிகட்ட பணிகளும்  நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கனெக்ட் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான, ஹாரர் படமான மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக வருகிறது கனெக்ட் . இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் திரைப்படம் ராக்கி.

இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமான சாணிக் காயிதம் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ராக்கி.RA ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ்குமார் தயாரித்துள்ள ராக்கி வருகிற டிசம்பர் 23-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது

வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள, ராக்கி திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ தற்போது வெளியானது. நயன்தாரா நடித்துள்ள அதிரடியான இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த ப்ரோமோ இதோ...